மெக்ஸிக்கோ நோக்கி நகரும் நியூட்டன் !

Tuesday, September 6th, 2016

மெக்சிக்கோவின் பசுபிக் கடற்பிராந்தியம் நோக்கி நியூட்டன் சூழற்காற்று நகர்ந்துவரும் நிலையில் அது தொடர்பில் முன்எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

மெக்ஸிக்கோவின் வட மேற்கு பிராந்தியம் நோக்கி மணித்தியாலத்திற்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் குறித்த சூழற்காற்று நகர்ந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூழற்காற்று காரணமாக பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என அமெரிக்க தேசிய சூழற்காற்று நிலையம் எச்சரிக்கை செய்துள்ளது.சூழற்காற்றின் தாக்கம் முடிவுக்கு வரும் வரை உயிரையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கான தயார்படுத்தல்களை மேற்கொள்ளுமாறு அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

நியூட்டன் சூழற்காற்று வலுவடைவதற்கு முன்னர் வார இறுதி நாட்களில் மெக்ஸிக்கோவின் தென்மேற்கு மாநிலமான ரேறேரோவில் மோசமான காலநிலை நிலவியிருந்தது.கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த கடும் மழை காரணமாக மாநிலத்தின் அநேகமான பகுதிகளில் 30 க்கும் அதிகமான மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக வீடுகள் மற்றும் பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீட்டுத் தொகுதியில் சிக்கியிருந்த 200 க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

earthly-hurricane

Related posts: