போராட்டத்தைக் கைவிடும்படி காவல்துறை கோரிக்கை: நிராகரித்த இளைஞர்கள்!

Friday, January 20th, 2017

முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்தைக் கைவிடும்படி இளைஞர்களுக்கு காவல்துறை கோரிக்கை வைத்தது. ஆனால், ஜல்லிக்கட்டு நடைபெறும் வரை தங்களது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று அறிவித்துவிட்டனர்.

சென்னை மெரினா கடற்கரையில் கூடியுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களும், போராட்டத்தைக் கைவிடும்படி காவல்துறை வேண்டுகோள் விடுத்தது. புது தில்லியில் முதல்வர் பன்னீர்செல்வம் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் அவசரச் சட்டத்தின் மூலம் இன்னும் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று கூறினார்.

முதல்வரன் அறிக்கையை போராட்டக்காரர்களுக்கு இடையே காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் வாசித்துக் காட்டினார்.பிறகு, முதல்வரின் அறிக்கையைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிடும்படி மிகவும் பணிவோடு கேட்டுக் கொண்டார். இது எனது அன்பான வேண்டுகோள் தான் என்றும் அவர் கூறினார்.

ஆனாலும், வாடிவாசல் திறந்து காளைகள் வெளியே வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று இளைஞர்கள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர்

chjk

Related posts: