வடகொரியா தொடர்பில் மற்றொரு தகவல்!
Friday, November 10th, 2017
அணு ஆயுத ஏவுகணை தயாரிப்புக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்படுவதால் வறட்சி பேரழிவில் சிக்கி 18 மில்லியன் மக்கள் சாவின் விளிம்பில் வடகொரியாவில் இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
வடகொரியாவின் வறட்சி பேரழிவு அப்பாவி பச்சிளம் குழந்தைகளை காவு வாங்கும் முன்னர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மன்ற தலைவர் அந்த நாட்டுக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு திட்டத் தலைவர் David Beasley, வடகொரியாவின் அணு ஆயுத பேரார்வத்தை மட்டுப்படுத்தாத வரை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் 18 மில்லியன் மக்களுக்கும் உணவு போய் சேர்வது கடினம் என்றார்.
மட்டுமின்றி ஊட்டச்சத்து குறைபாடில் சுமார் 200,000 சிறுவர்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடகொரியாவுக்காக 52 மில்லியன் டொலர் தொகையை திரட்ட திட்டமிட்டுள்ள ஐக்கிய நாடுகள் மன்றம், இதுவரை வெறும் 15 மில்லியன் டொலர் மட்டுமே திரட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Related posts:
|
|
|


