ஆப்கானின் பக்ரம் விமான தளத்தலிருந்து அமெரிக்க படையினர் வெளியேறினர்!

Friday, July 2nd, 2021

ஆப்கானிஸ்தானின் பக்ரம் விமானதளத்திலிருந்து அனைத்து அமெரிக்க படையினரும் வெளியேறியுள்ளனர்.

இரண்டு தசாப்தகால யுத்தத்தின் பின்னர் அமெரிக்க படையினர் பக்ரம் விமானதளத்திலிருந்து முற்றாக வெளியேறியுள்ளனர்.

தலிபான் உடனான உடன்படிக்கையின் அடிப்படையிலேயே அவர்கள் வெளியேறியுள்ளனர்.

பக்ரம் விமான தளத்திலிருந்து அனைத்து அமெரிக்க படையினரும் நேட்டோ படையினரும் வெளியேறியுள்ளனர் என அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

காபுலில் இருந்து 60 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பக்ரம் விமானதளமே அமெரிக்க இராணுவம் தனது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் தளமாக காணப்பட்டது.

அமெரிக்க படையினர் விலகிக்கொண்டுள்ளமை ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நடவடிக்கைகள் முடிவிற்கு வந்துள்ளதை குறித்து நிற்கின்றது.

விமானதளத்தை அமெரிக்கா ஆப்கான் படையினரிடம் கையளிக்கவுள்ளது- கையளிக்கும்நடவடிக்கை சனிக்கிழமை இடம்பெறும்.

அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானின் பக்ரம் விமானதளத்தில் காலடி எடுத்து வைத்து இரண்டுதசாப்தங்களின் பின்னர்அமெரிக்க படையினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

அமெரிக்க படையினர் அங்கு வருவதற்கு முன்னர் சிதைவடைந்த ஓடுபாதைகள் -ஒளிராத மின்விளக்குகள் கொண்டதாக காணப்பட்ட அந்த பகுதி கடந்த இரண்டு தசாப்தகாலத்தில் அழகிய சிறிய நகரமாக மாற்றமடைந்துள்ளது.

இரண்டு மைல் நீளமான ஓடுபாதை ஆப்கானில் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகளிற்கான மையமாக காணப்பட்டது.

ஜோர்ஜ் டபில்யூபுஷ் பராக் ஒபாமா டொனால்ட் டிரம்ப் என அனைவரும் இந்த விமானதளத்திற்கு விஜயம் செய்து வெற்றி மற்றும் ஆப்கானிற்கான சிறந்த எதிர்காலம் குறித்த வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர்

Related posts: