வடகொரியாவை கட்டுப்படுத்த சீனாவுடன் இணையும் அமெரிக்கா !
Friday, April 1st, 2016
வடகொரியா மேலும் ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொள்வதை தடுப்பதற்கு தமது நாடும் சீனாவும் ஒன்றிணைந்து பணியாற்றவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஐதரசன் குண்டு பரிசோதனையை மேற்கொண்டிருந்த வடகொரியா, பெலஸ்ரிக் ரக ஏவுகணைகளையும் விண்ணுக்கு செலுத்தியிருந்தது. இந்த நிலையில் வொஷிங்கடனில் நேற்று(31) ஆரம்பமான அணுசக்தி மாநாட்டில் பங்குகேற்றிருந்த சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை, அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா சந்தித்திருந்தார்.
அணு அற்ற கொரிய தீபகற்பத்தை உருவாக்குவதற்கு இரண்டு நாடுகளும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக பரக் ஒபாமா சுட்டிக்காட்டியுள்ளார்.
பதற்றத்தை அதிகரிக்கும் அணு ஏவுகணைப் பரிசோதனைகள் மற்றும் சர்வதேச கடப்பாடுகளை மீறும் நடவடிக்கைகளை எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்து சீன ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக பரக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|
|


