தலிபானிற்கு எதிராக ஆயுதமேந்தும் ஆப்கான் பெண்கள்!

Thursday, July 8th, 2021

தலிபானிற்கு எதிராக வடக்கு மற்றும் மத்திய ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஆயுதமேந்தியுள்ளனர்.

ஆயுதங்களுடன் பெண்கள் வீதிகளில் பேரணியாக செல்வதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடங்களில் வெளியாகியுள்ளன.

தலிபான்ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை கைப்பற்றிவரும் தருணத்தில் தலிபானிற்கு எதிராக இவர்கள் ஆயுதமேந்தியுள்ளனர்.

நான் எனது கல்வியை தொடரவிரும்புகின்றேன்,வன்முறையிலிருந்து தூர விலகியிருக்க விரும்புகின்றேன் ஆனால் இங்குள்ள சூழ்நிலைகள் நானும் ஏனைய பெண்களும் தலிபானை எதிர்க்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கின்றார் ஜொவ்ஜான்.

தற்போது முற்றுகையிடப்பட்டுள்ள மாகாணத்தின் தலைநகரில் வழங்கப்பட்ட ஒரு நாள் ஆயுதபயிற்சியில் அவர் கலந்துகொண்டு பயிற்சி எடுத்தார்.

பெண்களை தாங்கள் விரும்பியபடி நடத்துபவர்களின் கரங்களி ல்நாடு வீழ்வதை நான் விரும்பவில்லை- நாங்கள் போரிடவேண்டிய தேவையேற்பட்டால் அதற்கான மன உறுதி எங்களிற்கு உள்ளது என்பதை காண்பிக்கவே நாங்கள் ஆயுதமேந்தினோம் என அவர் தெரிவித்துள்ளார்.

கோர் மாகாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் நூற்றுக்கும் மேற்பட்டபெண்கள் துப்பாக்கிகளுடன் காணப்படும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி யுள்ளன.

சமூக பழமைவாதம் மற்றும் அனுபவம் இன்மை காரணமாக அவர்கள் போர்முனைக்கு செல்லப் போவதில்லை. எனினும் இது தலிபான் ஆட்சி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தவர்களுக்கும் எவ்வளவு தூரம் ஆபத்தானதாக மாறக்கூடும் என பெண்கள் அச்சப்படுவதை இது காண்பித்துள்ளது என கார்டியன் தெரிவித்துள்ளது.

இவர்களில் சில பெண்கள் தாங்கள் ஆயுதமேந்துவதன் மூலம் பாதுகாப்பு படையினருக்கு நம்பிக்கையை தைரியத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். ஆனால் பலர் போர்க்களங்களிற்கு செல்ல தயாராக உள்ளனர் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஹலீமா பரஸ்டிஸ் தெரிவித்துள்ளார்.

000

Related posts: