வாகன வேகத்திற்கு ஏற்றவாறு அபராதம் – தேசிய பாதுகாப்புச் சபைத் தலைவர் தெரிவிப்பு!

Monday, April 24th, 2017

நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைவிடவும் அதிகமான வேகத்தில் பயணிக்கும் வாகனங்களுக்கு எதிராக, அறவிடப்படும் தண்டப்பணத்தை, வேகத்துக்கேற்ப அதிகரிப்பதற்கான முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கொத்தாகொட தெரிவித்தார்.

அதனடிப்படையில்,

சாதாரண வாகனமொன்று, மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும். அதனைவிட வேகமாகப் பயணிக்கும் போது அபராதம் விதிக்கப்படும்.

ஒருமணித்தியாலத்துக்கு 80-90 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் போது ஒரு அபராதத் தொகையும், ஒரு மணித்தியாலத்துக்கு 90-100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் போது அதற்கு ஒரு அபராதத் தொகையும் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது, அன்றாடம் இடம்பெறும், வாகன விபத்துகளின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்கின்றது, வாகன விபத்துகளை தவிர்க்கும் வகையிலேயே இந்த புதிய திட்டம் கொண்டுவரப்படவுள்ளது.  ஓட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வேக் கட்டுப்பாட்டை மீறி கூடுதல் வேகத்தில் வாகனங்கள் செலுத்தப்பட்டால் அதன் வேகத்திற்கு அமைய அபராதத் தொகை அறவீடு செய்யும் நடைமுறை விரைவில் அறிமுகள் செய்யப்படவுள்ளளது. அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இதே விதமாக அபராதத்தொகை அறவீடு செய்யப்படவுள்ளது என்றார்.

Related posts: