தலிபான்களுடனான அமெரிக்காவின் பேச்சுவார்த்தை நிறைவு!

Tuesday, August 13th, 2019


ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்க துருப்பினரை மீள தாயகத்திற்கு அனுப்புவது தொடர்பாக தாலிபான்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே இடம்பெற்ற பேச்சு வார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட இரு தரப்பினரும், தமது தலைமையுடன் ஆலோசனையினை மேற்கொண்டதன் பின்னரே அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்கப்படும் என தாலிபான் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தாலிபான் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையேயான எட்டாவது சுற்று பேச்சுவார்த்தைகள் கட்டாரில் நிறைவடைந்துள்ளது. கடந்த வாரம் தாலிபான்களின் பிறிதொரு பேச்சாளர் கருத்து தெரிவிக்கையில், 18 வருட கால யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வருவதில் இரு தரப்பினரும் செயல்படுவதாக தெரிவித்திருந்தார்.

தாலிபான் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ளனர். தாலிபான்கள் நாளாந்தம் அரச படைகள், அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதல்களின் போது அதிக எண்ணிக்கையிலான பொது மக்களும் கொல்லப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: