ஜெர்மனியில் அடை மழை : 4 பேர் பலி!
Tuesday, May 31st, 2016
தெற்கு ஜெர்மனியில், பெய்த கடும் மழையால் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பேடன் – வுட்ரெம்பெர்க்கில் உள்ள பிரவுன்ஸ்பச் நகரில் ஆற்றின் கரை உடைந்து நகருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டு, கடைகளின் கதவுகள் மீது மோதின. அவ்வாறு அடித்துச் செல்லப்பட்ட கார்களுக்குள்ளும் சிலர் சிக்கிக் கொண்டார்கள். அவர்கள் மீட்புப் படையினர் மீட்டனர்.
மாதக்கணக்கில் பெய்ய வேண்டிய மழை, சில மணி நேரங்களில் கொட்டித் தீர்த்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது..
Related posts:
ஒபாமாவை விமர்சித்தார் பிலிப்பைன்ஸ் அதிபர்: சந்திப்பை ரத்து செய்தது அமெரிக்கா!
ரஷ்ய விமான தாங்கி கப்பலை கண்காணிக்க தயாராகும் பிரித்தானியா!
டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் - பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது !
|
|
|


