ஒபாமாவை விமர்சித்தார் பிலிப்பைன்ஸ் அதிபர்:  சந்திப்பை ரத்து செய்தது அமெரிக்கா!

Tuesday, September 6th, 2016

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிலிப்பைன்ஸ் அதிபர்  ரோடிரிகோ டுட்டர்டே-வை இன்று சந்திக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. அப்போது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் விவகாரத்தில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் ஒபாமா கேள்வி எழுப்புவார் என தகவல்கள் வெளியானது.

இதுபற்றி அறிந்ததும் கடும் கோபமடைந்த பிலிப்பைன்ஸ் அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே, ஒபாமா என்ன பெரிய கொம்பனா? நான் ஒன்றும் அமெரிக்காவுக்கு தலையாட்டி பொம்மை இல்லை. நான் இறையாண்மை மிக்க ஒரு நாட்டின் அதிபர். என்நாட்டு மக்களை தவிர வேறு யாருக்கும் நான் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. Son of a bitch உன்னை (ஒபாமா) சபித்து விடுவேன் என கடுமையான பேசியுள்ளார்.

இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகவே, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் அறிவித்துள்ளார்.
மேலும் அந்த நேரத்தில் தென் கொரியா ஜனாதிபதியை ஒபாமா சந்தித்து பேசலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Daily_News_5353466272355

Related posts: