அமைதி உடன்படிக்கைக்கு கொலம்பிய பாராளுமன்றில் ஒப்புதல்!

Friday, December 2nd, 2016
கொலம்பிய பார்க் கிளர்ச்சியாளர்களுடனான திருத்தப்பட்ட அமைதி உடன்படிக்கைக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

கொலம்பிய அரசு மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையிலான 50 ஆண்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவே இந்த அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. கடந்த அரை நூற்றாண்டு யுத்தத்தில் 260,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதோடு மில்லியன் கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

செனட் அவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த அமைதி உடன்படிக்கைக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பை வெளியிட்டபோதும் கீழவை நேற்று முன்தினம் இந்த உடன்படிக்கையை அங்கீகரித்துள்ளது. இது தொடர்பிலான முதல் அமைதி உடன்படிக்கை சர்வஜன வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்ட நிலையில் திருத்தப்பட்ட ஆவணத்திற்கு மக்கள் வாக்கு கோரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு வரலாற்று வெற்றி என ஜனாதிபதி ஜுவான் மானுவெல் சான்டோஸ் வர்ணித்துள்ளார். இந்த செயல்முறையின்படி ஆயிரக்கணக்கான பாக் போராளிகள் காடுகளில் இருக்கும் முகாம்களில் இருந்து வெளியேறி ஆயுதங்களை கீழே வைக்கவுள்ளனர். ஐந்து நாட்களுக்குள் இந்த செயல்முறை இடம்பெறவுள்ளது. கிளர்ச்சியாளர்கள் அடுத்த ஆறு மாதங்களில் இடைமாறும் வலையங்களுக்கு சென்று தமது ஆயுதங்களை கையளிக் கவிருப்பதோடு அரசியல் கட்சி ஒன்றையும் நிறுவ உள்ளனர்.

முன்னாள் பார்க் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு செல்லவிருக்கும் இராணுவம் அங்கு போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவுள்ளது. கியூப தலைநகர் ஹவானாவில் இடம்பெற்ற நான்கு ஆண்டு பேச்சுவார்த்தைக்கு பின்னரே இந்த ஆண்டு ஆரம்பத்தில் அரசு மற்றும் பார்க் கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் உடன்பாடொன்று எட்டப்பட்டது.

எனினும் புதிய உடன்படிக்கை எதிர்ப்பாளர்களின் பரிந்துரைகளை உள்ளடக்கிய வலுவான ஒன்று என்று ஜனாதிபதி ஜுவான் மானுவேல் சான்டோஸ் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ உரிபே தலைமையிலான எதிர்ப்பாளர்கள், திருத்தப்பட்ட உடன்படிக்கையிலும் பார்க் தலைவர்களுக்கு அதிக கருணை காட்டப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

பார்க் கிளர்ச்சியாளர்களுடனான அமைதி முயற்சிக்காக ஜனாதிபதி ஜுவான் மானுவெல் சான்டோஸுக்கு அமைதிக்கான நோபல் விருதும் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

coltkn-12-02-fr-02170702593_5068807_01122016_mss_cmy

Related posts: