பயிற்சியில் அமெரிக்க, தென் கொரிய படையினர்!

Friday, February 17th, 2017

தாய்லாந்து கடற்படைத்தளத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற 36 ஆவது கோப்ரா கோல்ட் இராணுவ பயிற்சியின்போது, தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் தென் கொரிய கடற்படையினரும் இணைந்து தரையிலும் நீரிலும் தாக்குதல் நடத்தும் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

ஆசிய-பசுபிக் பிராந்தியத்திலுள்ள நாடுகளில் படையினர் மத்தியில் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலும் நுட்பங்கள் மற்றும் திறன்களை பரிமாறி போரிடுவதற்கும் வாய்ப்புக்களை வழங்கும் வகையில் வருடம்தோறும் கோப்ரா கோல்ட் பயிற்சி நடைபெறுகின்றது.

இந்த பயிற்சியில், 29 நாடுகளைச் சேர்ந்த படையினர் பங்கேற்பர். இவர்களுள் அமெரிக்காவிலிருந்து மாத்திரம் 3600 க்கும் மேற்பட்ட படையினர் பங்கேற்பர்.

இந்நிலையில் இன்றைய தினம் இடம்பெற்ற இந்த பயிற்சியில் பங்கேற்றிருந்த அமெரிக்க கடற்படை வீரர்கள், தாய்லாந்தில் நிலவும் ஈரப்பதனான காலநிலை ஆரம்பத்தில் சிரமங்களை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் இராணுவ ஆட்சிக்கு அழுத்தங்கள் கொடுக்கும் நிலைப்பாடு குறைவடைந்துள்ளது. அமெரிக்கா, தாய்லாந்து மற்றும் சீனாவுடனான உறவுகள் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்பதற்கு முன்பே மேம்பட ஆரம்பித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

_92979441_gettyimages-539181972-1

Related posts: