ஐ.எஸ் ஆயுததாரிகள் இராயனத் தாக்குதல் மேற்கொண்டனர் – அமெரிக்கா!

Friday, September 23rd, 2016

ஈராக்கில் நிலைகொண்டுள்ள தமது படையினரை இலக்கு வைத்து ஐ.எஸ் ஆயுததாரிகளால் நடத்தப்பட்ட எறிகணை தாக்குதலில் இரசாயனம் உள்ளதாக அமெரிக்க இராணுவம் உறுப்படுத்தியுள்ளது.

ஐ.எஸ் ஆயுததாரிகளின் கோட்டையாக காணப்படும் மொசூல் நகருக்கு அருகிலுள்ள விமானத் தளத்தை இலக்குவைத்து இந்த எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இரசாயன ஆயுதத் தாக்குதலை நடத்துவது தொடர்பான திறன் ஐ.எஸ் ஆயுததாரிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளதாக அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைவர் கடற்படை ஜெனரல் ஜோசெப் டுன்போர்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த  தாக்குதல் தீவிரமான ஒன்றென அவர் குறிப்பிட்டுள்ளார்.ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் ஆயுததாரிகள் இரசாயன ஆயுதங்களை தயாரிப்பதாகவும் அதனை பயன்படுத்துவதாகவும் நீண்டகாலமாக சந்தேகம் நிலவியிருந்தது.

இந்த நிலையில் அமெரிக்க செனட்டின் ஆயுத சேவைகள் தொடர்பான குழுவிடம் கருத்து வெளியிட்ட ஜெனரல் டுன்போர்ட், ஐ.எஸ் ஆயுததாரிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் கந்தக இரசாயனம் இருந்ததாக கூறியுள்ளார்.

குறித்த கந்தக இரசாயனம், தோல், கண் மற்றும் வான் வழியாக பாதிப்புக்களை ஏற்படுத்துவதன் மூலம் உயிரிழப்புக்கள் மற்றும் ஊனத்திற்கு வழியேற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

download

Related posts: