கடமை நேரத்துக்கு அப்பால் பணியாற்ற வேண்டாம்: பிரான்ஸில் புதிய விதிமுறை!

Monday, January 2nd, 2017

பிரான்ஸில் அலுவலக நேரங்களை தவிர, பிற நேரங்களில் பணியாளர்கள் தங்கள் அலுவலக மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கும் உரிமை வழங்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

50 பணியாளர்களுக்கு மேலாக இருக்கும் நிறுவனங்கள், பணியாளர்களின் நன்னடத்தைகளை பதிவு செய்திட வேண்டும்; மேலும் பணியாளர்கள் எந்த நேரத்தில் மின்னஞ்சல்களுக்குபதில் அளிக்க வேண்டாம் என்பதையும் குறிப்பிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படும்.

இந்த புதிய சட்டத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள், பணி நேரங்களை தவிர்த்து பிற நேரங்களில் தங்கள் அலுவலக மின்னஞ்சல்களை பார்த்து அதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் பணியாளர்களுக்கு அதிக நேரத்திற்கு தகுந்த ஊதியம் வழங்கப்பட வில்லை என கூறுகின்றனர்.

அந்த பழக்கத்தால் மன அழுத்தம், அதிக சோர்வு, தூக்கமின்மை மற்றும் உறவுகளில் சிக்கல்கள் என பல ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

_93201341_gettyimages-630581052

Related posts: