ஆப்கனினிலுள்ள ஜெர்மனி துணை தூதரகத்தில் கார் குண்டு தாக்குதல்:2 பேர் பலி!

Friday, November 11th, 2016

ஆப்கானின் வட பகுதி நகரான மஸார் -இ- ஷரிஃபில் இருக்கும் ஜெர்மனி துணை தூதரகத்தில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன்  80 பேருக்கும் மேலானோர் காயமடைந்து மருத்துவமனைகளுக்கு எடுத்து செல்லப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வெடி பொருட்களால் நிரப்பப்பட்ட குறைந்தது ஒரு கார், சுற்றுச்சுவரில் மோத வைக்கப்பட்டு நடத்திய தாக்குதலால் பெரிய சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக அந்நகரத்தில் இரக்கும் நேட்டோ செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்,

இந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து பலமுறை துப்பாக்கிக்சூடும் நடைபெற்றுள்ளது.ஜெர்மனியின் தலைமையில் இந்நகருக்கு வெளியே ஒரு நேட்டோ படைப்பிரிவு நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பேற்றிருக்கிறது.ஆப்கானிஸ்தானின் மூன்றாவது பெரிய நகரான மஸாரில் உள்ள இலக்குகளை இந்த குழு இதற்கு முன்னரும் தாக்கியுள்ளது.

_92390929_45b4220a-d898-4308-9728-20e762fe03c8

Related posts: