ரோஹிங்கிய அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதியில் தீப்பரவல் – சுமார் 800 வீடுகள் தீக்கிரை!

Monday, January 8th, 2024

பங்களாதேஷில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கிய அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலைத் தொடர்ந்து சுமார் 800 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள முகாமொன்றிலே நேற்று (07) அதிகாலை இந்த விபத்து நேர்ந்ததாக பங்களாதேஷ் அகதிகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் சுமார் ஒரு மில்லியன் ரோஹிங்கிய அகதிகளின் தாயகமாக காணப்படுகிறது. மியன்மாரில் 2017 ஆம் ஆண்டு முஸ்லிம் சிறுபான்மையினர் மீதான இராணுவ ஒடுக்குமுறையில் இருந்து தப்பிச்சென்ற பலர் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், குறித்த பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக சுமார் 7,000 ரோஹிங்கிய அகதிகள் வீடுகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் தீப்பரவலுக்கான காரணத்தை கண்டறியும் வகையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், தீ மேலும் பரவுவதனை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் ரோஹிங்கிய அகதிகள் முகாம்களில் தீப்பரவல் ஏற்படுவது பொதுவானதொரு விடயமாக பார்க்கப்படுகிறது. அத்துடன், வன்முறை காரணமாகவும் ரோஹிங்கிய அகதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், முகாம்களின் பாதிக்காப்பு மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, முன்னதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் தீப்பரவல், வன்முறை உள்ளிட்ட பல காரணங்களினால் ரோஹிங்கிய அகதிகள் பல கொல்லப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.

000

Related posts: