பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 42 பேர் பலி : சிம்பாப்வேயில் சோகம்!
Saturday, November 17th, 2018
சிம்பாப்வேயில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்தவர்களில் குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 20 பேர் காயடைந்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென் ஆபிரிக்க எல்லையை ஒட்டி அமைந்துள்ள பிட்பிரிட்ஜ் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது குறித்த பேருந்து திடீரென தீப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வைத்திருந்த எரிவாயு குப்பியினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அடையாளம் காண முடியாத அளவிற்கு சில உடல்கள் எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
விளையாட்டு மைதானத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து 20 பேர் பலி : நைஜீரியா பயங்கரம்!
மீண்டும் ஏவுகணை சோதனைக்கு வடகொரியா திட்டம்: அச்சத்தில் ஜப்பான்!
இராணுவத்தின் அடுத்த வருடத்திற்கான செலவீனத்தை குறைக்க தீர்மானம் - பாகிஸ்தான் உள்துறை சேவையின் இயக்கு...
|
|
|


