விளையாட்டு மைதானத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து 20 பேர் பலி : நைஜீரியா பயங்கரம்!

Friday, April 21st, 2017

நைஜீரியா நாட்டில் கால்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றபோது மின் கம்பி ஒன்று அறுந்து ரசிகர்கள் மீது விழுந்ததில் 20 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

நைஜீரியாவில் உள்ள Calabar என்ற நகரில் Manchester United மற்றும் Red Devils ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று இரவு கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றுள்ளது.இப்போட்டியை கண்டுகளிக்கவும், தங்களது விருப்பமான அணிக்கு ஆதரவு தெரிவிக்கவும் நூற்றக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் கூடியிருந்துள்ளனர்.

விளையாட்டு போட்டிகள் தொடங்கப்பட்டு வீரர்கள் உற்சாகமாக விளையாடி வந்துள்ளனர். அப்போது, திடீரென ரசிகர்கள் மத்தியில் பயங்கர அலறல் சத்தம் கேட்டுள்ளது. ஓரிடத்தில் இருந்த மின் கம்பி திடீரென அறுந்து ரசிகர்கள் மீது விழுந்துள்ளது.

அதிகளவு மின்னழுத்தம் உள்ள கம்பி என்பதால் ரசிகர்கள் மேல் விழுந்ததும் அடுத்தடுத்து நபர்கள் உடல் கருகி தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடூரமான அசம்பாவிதத்தை தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் அவசரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேகமாக செயல்பட்ட மீட்புக் குழுவினர் காயமடைந்த மற்ற 80 பேரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உயிரிழந்தது 7 பேர் என பொலிசார் கூறினாலும், பலியானவர்களின் எண்ணிக்கை 20-க்கும் அதிகமாக உள்ளது என உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

விளையாட்டு மைதானத்தில் நிகழ்ந்த துயரத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆளுநர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.

Related posts: