இராணுவத்தின் அடுத்த வருடத்திற்கான செலவீனத்தை குறைக்க தீர்மானம் – பாகிஸ்தான் உள்துறை சேவையின் இயக்குனர்!

Thursday, June 6th, 2019

நாட்டின் பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு பாகிஸ்தான் இராணுவத்தின் அடுத்த வருடத்திற்கான செலவீனத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை சேவையின் இயக்குனர் நாயகம் மேஜர் ஜெனரல் அசிப் கபீர் தெரிவித்துள்ளார்.

செலவீனங்கள் குறைக்கப்படுகின்ற போதிலும், பாகிஸ்தானின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எந்த விதமான மாற்றமும் ஏற்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் மூன்று பாதுகாப்பு படைகளில் செலவீனங்கள் குறைக்கப்படுகின்ற போதிலும், நாட்டுக்கு உள்ளேயும், நாட்டிற்கு வெளியேயிருந்தும் வரும் எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்வதில் எந்த விதமான மாற்றமும் இருக்கப் போவதில்லை என பாகிஸ்தான் உள்துறை சேவையின் இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் இராணுவம் மேற்கொள்ளும் இந்த சுயாதீன நடவடிக்கைகளுக்கு பிரதமர் இம்ரான் கான் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானின் பாதீடு எதிர்வரும் 11 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது, இராணுவத்தின் செலவீன குறைப்பு விவகாரம் அதில் பிரதிபலிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2018 ஆம் ஆண்டு இராணுவ செலவீனங்களுக்காக 11.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த தொகை உலகிலேயே அதிக அளவிலான இராணுவ செலவீடு என ஸ்ரொக்ஹோம் சர்வதேச சமாதான ஆய்வு நிலையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: