கடும் இராணுவ தாக்குதல்: லிபியாவில் 140 பேர் பலி!

Saturday, May 20th, 2017

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில்உள்ள இராணுவ விமானத்தளத்தை மீட்பதற்காக அரசாங்கம் நடத்திய சரமாரி தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 140 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

லிபியாவின் முன்னாள் அதிபரான கடாபியை நோட்டோ ஆதரவு படைகள் கடந்த 2011-ம் ஆண்டு கொன்றதை தொடர்ந்து அந்நாட்டில் தொடர்ந்து அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வருகின்றன.

அரசுக்கு எதிராக உருவான Libyan National Army என்ற கிளர்ச்சிப்படை அரசாங்கத்திற்கு சொந்தமான Brak al-Shati என்ற ராணுவ விமானத்தளத்தை கடந்த டிசம்பர் மாதம் கைப்பற்றியது.இந்த விமானத்தளத்தை மீட்கும் வகையில் அரசாங்க ராணுவம்  அதிரடி தாக்குதலை தொடுத்துள்ளது. இத்தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது.

ஆனால், தற்போது வெளியான செய்தியில் பொதுமக்கள் உட்பட 140 பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.எனினும், தாக்குதலை நடத்த உத்தரவிடவில்லை என லிபியாவின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து லிபியாவின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவ தளபதி ஆகிய இருவர் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் மிகவும் கொடூரமாகவும் சர்வதேச சட்டத்திட்டங்களை மீறுவதாகவும் உள்ளதாக லிபியாவிற்கான ஐ.நா சபை தூதரான Martin Kobler என்பவர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Related posts: