முதன் முறையாக பல் அறுவை சிகிச்சை செய்த ரோபோ !

Sunday, October 1st, 2017

 

உலகில் முதன் முறையாக சீன ரோபோ பல் அறுவை சிகிச்சை ஒனடறைச் செய்து புதிய பற்களை பொருத்திச்  சாதனை படைத்துள்ளது.

சீனாவில் பல் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் 40 கோடி மக்கள் புதிய பற்களுக்காக காத்திருப்பது தெரியவந்தது.

ஆனால் அதற்கு தகுந்தாற் போல் பல் வைத்தியர்கள் இல்லை, எனவே பல் மருத்துவ துறையில் ‘ரோபோக்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டது.

அதற்காக ஸியான் நகரில் உள்ள இராணுவ மருத்துவ பல்கலைக்கழக வைத்தியசாலை, பெய்ஜிங்கில் செயற்படும் பெய்காங் பல்கலைக்கழகத்தின் ‘ரோபோ’ நிறுவனம் இணைந்து பல் மருத்துவ ரோபோவை உருவாக்கியுள்ளது.

அந்த ‘ரோபோ’ ஷான்ஸி மாகாணத்தின் ‘ஸியான்’ நகர வைத்தியசாலையில்  ஒரு பெண்ணுக்கு பல் அறுவை சிகிச்சை செய்தது.

அப்போது அந்த பெண்ணுக்கு புதிதாக 2 செயற்கை பற்களை பொருத்தியது, இந்த அறுவை சிகிச்சையின் போது ரோபோவுடன் வைத்தியர்களும் உடன் இருந்தனர்.

பற்களை ‘ரோபோ’ சரியாக பொருத்தியது, 0.2 முதல் 0.3 மி.மீட்டர் மட்டுமே மிக சிறு தவறு நடந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சைக்கு முன்பு பல் வைத்தியர்கள் நோயாளிகளுக்குரிய கருவிகளை பொருத்தினர், அறுவை சிகிச்சைக்குரிய திட்ட செயல்பாடுகள் ரோபோவில் பதிவு செய்யப்பட்டது.

அதன்படி ‘ரோபோ’ பல் அறுவை சிகிச்சை செய்து புதிய பற்களை பொருத்தி சாதனை படைத்தது, இதன் மூலம் உலகில் பல் அறுவை சிகிச்சை செய்த முதல் ரோபோ என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

இதற்கு முன்பு பற்களில் ரூட் கேனால் அறுவை சிகிச்சை மற்றும் பல் தாடை எலும்பு அறுவை சிகிச்சையில் மட்டுமே ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது பல் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. https://youtu.be/DcKFLYPBLl8

Related posts: