வடகொரியா ஏவுகணைகளை பரிசோதனை!

Monday, March 6th, 2017

வடகொரியா மீண்டும் நான்கு ஏவுகணைகளை பரீட்சித்துள்ளது. ஜப்பான் கடற்பரப்பிற்கு ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆயிரம் கிலோ மீற்றர்கள் கடந்து மூன்று ஏவுகணைகள் ஜப்பானின் கடற்பரப்பில் வீழ்ந்துள்ளது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையானது புதிய வகையிலான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார்.

வடகொரிய சீன எல்லைப் பகுதியிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. எவ்வாறான ஏவுகணை ஏவப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஏவுகணை பரிசோதனையிடப்பட்டதனை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.  அணு மற்றும் ஏவுகணை பரிசோதனைகளை நடாத்த ஐக்கிய நாடுகள் அமைப்பு வடகொரியாவிற்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: