துருக்கியில் 12,000க்கு அதிகமான பொலிஸார் பணி இடைநிறுத்தம்!

Wednesday, October 5th, 2016

கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் மூளை எனக் குற்றஞ்சாட்டப்படும் முஸ்லிம் மதகுருவான பெதுல்லா குல்லேனுடன் தொடர்புகளைக் கொண்டதாகக் கூறப்படும், 12,000க்கு அதிகமான பொலிஸ் அதிகாரிகளை, துருக்கி அதிகாரிகள் இடைநிறுத்தியதாக, இன்று செவ்வாய்க்கிழமை (04) பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இராணுவப் புரட்சி தொடர்பான விசாரணையின் அங்கமாக, பொலிஸ் தலைமையதிகாரிகள் 2,523 பேர் உட்பட, 12,801 பேர், பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, அறிக்கையொன்றில், பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்தமாக, 270,000 பொலிஸ் அதிகாரிகளை துருக்கி கொண்டுள்ளது.

நீதி, பொதுச் சேவைகள், இராணுவம், கல்வியியற் துறைகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், குல்லேனுடன் தொடர்புகளைக் கொண்ட குற்றச்சாட்டில், 32,000 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 90 நாட்களுக்கு அவசர கால நிலையை, நேற்றுத் திங்கட்கிழமை (03) துருக்கி நீடித்திருந்தது. குறைந்தது 12 மாதங்களுக்காவது, அவசரகாலநிலை தேவை என்றவாறான கருத்துகளை, ஜனாதிபதி எர்டோவான் வெளிப்படுத்தியிருந்தார்.

turkey flag1

Related posts: