இடா புயலால் அமெரிக்காவில் பெரும் பாதிப்பு!

Friday, September 3rd, 2021

மெக்சிகோ வளைகுடாவில் உருவான ‘இடா’ புயல் அமெரிக்காவைத் தாக்கி பெரும் சேதங்களை விளைவித்துள்ளது.

இந்த புயலினால், நியூயோர்க், மேரிலாண்ட், நியூஜெர்சி, கனக்டிகட் போன்ற பல்வேறு நகரங்களும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.

நியூயோர்க் நகரில் கனமழை பெய்ததால் தொடருந்து சுரங்கப்பாதைகள், சாலைகள் மற்றும் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. வரலாறு காணாத மோசமான வானிலை என தெரிவித்துள்ள நியூயோர்க் நகர மேயர், அங்கு அவசரநிலையைப் பிரகடனம் செய்துள்ளார்.

நியூயோர்க் மத்திய பூங்காவில் மட்டும் ஒரு மணி நேரத்தில் 8 சென்டிமீட்டர் மழை பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  ஏற்கனவே இடா புயல் தாக்கிய லூசியானா மற்றும் நியூ ஆர்லியன்ஸ் மாகாணங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின் இணைப்பு மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலியல், நியூயோர்க் நியூ ஜெர்சியில் கனமழை காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: