துருக்கியில் கார்க்குண்டுத் தாக்குதல்! 37 பேர் பலி

Tuesday, March 15th, 2016
துருக்­கிய தலை­நகர் அங்­கா­ராவில் சன­சந்­தடி மிக்க சதுக்­கத்­துக்கு அண்­மை­யி­லுள்ள பஸ் நிலை­யத்தில் ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை இடம்­பெற்ற தற்­கொலைக் கார் குண்டு வெடிப்பில் குறைந்­தது 37 பேர் பலி­யா­ன­துடன் 125 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.
மேற்­படி சம்­ப­வத்தில் குண்­டு­தாரி என சந்­தே­கிக்­கப்­படும் ஒரு­வரும் பலி­யா­கி­யுள்­ள­தாக தெரி ­விக்­கப்­ப­டு­கி­றது. இந்தக் கார் குண்டுத் தாக்­கு­த­லுக்கு அந் நாட்டு ஜனா­திபதி தாயிப் எர்டோகன் கடும் கண்­டனம் தெரி வித்­துள்ளார்.
மேற்­படி தாக்­கு­த­லு க்கு இது­வரை எந்­த­வொரு குழுவும் உரி­மை­கோ­ர­வில்லை என்ற போதும் குர்திஷ் கிளர்ச்­சி­யா­ளர்­களே காரணம் என நம்­பப்­ப­டு­கிறது.
கிஸிலே சதுக்­கத்­துக்கு அரு­கி­லுள்ள பஸ் நிலை­யத்தில் இடம் ­பெற்ற இந்தத் தாக்­கு­த­லா­னது ஒரு மாதத்­துக்கும் குறைந்த காலப் பகு­தியில் அந்­நாட்டு தலை­ந­கரில் இடம்­பெறும் இரண்­டா­வது பாரிய தாக்­கு­த­லாகும்.
கடந்த பெப்­ர­வரி மாதம் 17 ஆம் திகதி இரா­ணு­வத்தை இலக்குவைத்து நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் 29 பேர் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர். அந்தத் தாக்­கு­த­லுக்கு குர்திஷ் தொழி­லாளர் கட்சி இயக்­கத்தின் ஒரு பிரிவு உரி­மை­ கோ­ரி­யி­ருந்­தது.
இந்­நி­லையில் பிந்­திய தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­த­லை­யொட்டி 11 துருக்­கிய போர் விமா­னங்கள் ஈராக்­கி­லுள்ள குர்திஷ் கிளர்ச்­சி­யா­ளர்­களின் இலக்­குகள் மீது குண்டு வீச்­சு­களை நடத்­தி­யுள்­ளன. இதன்­போது கிளர்ச்­சி­யா­ளர்­களின் ஆயு தக் களஞ்­சி­ய­சாலை உட்­பட 18 இலக்­குகள் மீது தாக்­குதல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன.
மேலும் தென் கிழக்கு துருக்­கியில் குர்திஷ் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ரான பாது­காப்பு நட வடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதையடுத்து அந்தப் பிராந்தியத்திலுள்ள பல பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: