துருக்கியில் பழமை வாய்ந்த நாளிதழில் பணியாற்றி வந்த 9 செய்தியாளர்கள் கைது!

Sunday, November 6th, 2016

துருக்கியில் பழமை வாய்ந்த நாளிதழ் ஒன்றில் பணியாற்றிய 9 செய்தியாளர்கள் பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கும்ரியத் அல்லதி தி ரிபப்ளிக் என்றழைக்கப்படும் நாளிதழின் தலைமை ஆசிரியர் முராட் சபுன்கு, கேலிச்சித்திரம் வரையும் மூஸா கார்ட் மற்றும் கட்டுரையாளர் கட்ரி குர்செல் ஆகியோரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.கட்சி குர்செல் தனது கட்டுரைகளில் துருக்கி அதிபர் எர்துவானை அடிக்கடி விமர்சித்திருந்தார்.

இவர்கள் அனைவரும் கடந்த திங்கட்கிழமையன்று தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.அரசுக்கு எதிராக செயல்படும் ஊடகங்கள் மூடப்பட்டு வரும் நிலையில், சிறைக்கம்பிகளுக்கு பின்னால் பொதுமக்களின் உரிமைகள் அடைக்கப்படுவதாக அவர்களுடைய வழக்கறிஞர் கருத்து தெரிவித்துள்ளார்.இவர்களை தவிர்த்து குர்து ஆதரவு எச்.டி.பி கட்சியைச் சேர்ந்த 9 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

_92288767_gettyimages-620131534

Related posts: