ஏவுகணைகளை ஈரானுக்கு அனுப்புகிறது ரஷ்யா!

Wednesday, April 6th, 2016
ரஷ்யா உயர்தொழில்நுட்ப வான் பாதுகாப்பு ஏவுகணைகளை விரைவில் இரானுக்கு அனுப்பவிருப்பதாகவும் .பல ஆண்டுகால தாமதத்திற்குப் பிறகு இவை அனுப்பிவைக்கப்படவுள்ளன என்றும் செய்திகள் கூறுகின்றன.
கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணைகளையே சுட்டுவீழ்த்தும் திறன் படைத்த s – 300 அமைப்பானது விரைவில் அனுப்பப்படும் எனவும். இந்த வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவதற்கான 900 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தம் 2007ல் கையெழுத்தானதாகவும் தெரிவிக்கப்படகின்றது.
ஆனால், ஈரான் மீது ஐ.நா. தடைகளை விதித்ததையடுத்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டது. இரானின் அணுசக்தித் திட்டங்கள் குறித்து கடந்த ஆண்டு ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டதையடுத்து, இந்த ஒப்பந்தத்தை ரஷ்ய அரசு புதுப்பித்தது ஆனால், இந்த கருவிகளை ஈரானுக்கு வழங்குவதை இஸ்ரேல் எதிர்க்கிறது

Related posts: