இளவரசி டயானாவின் 20ஆம் ஆண்டு நினைவு! அன்னைக்கு பிரமாண்ட நினைவிடம் எழுப்பும் மகன்கள்!!

Sunday, March 20th, 2016

பிரித்தானிய இளவரசியான டயானா உயிரிழந்து 20 வருடங்கள் பூர்த்தியாக உள்ள நிலையில் தங்களது தாயாருக்கு புதிதாக நினைவிடம் ஒன்றை திறக்க உள்ளதாக இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய இளவரசர் சார்லஸின் மனைவியான இளவரசி டயானா கடந்த 1997ம் ஆண்டு பாரீஸில் நிகழ்ந்த கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தினை தொடர்ந்து, இளவரசி டயானாவிற்கு Hyde Park என்ற பூங்காவில் நினைவிடம் எழுப்பப்பட்டது.

ஆனால், இந்த நினைவிடம் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருவதால், தற்போது மற்றொரு பிரமாண்டமான நினைவிடத்தை இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி ஆகியோர் மிகுந்த கவனத்துடன் கட்டி வருகின்றனர்.

2017ம் ஆண்டு டயானா உயிரிழந்த 20 வருடங்கள் பூர்த்தியாவதால், இந்த வருடத்திலேயே புதிய நினைவிடத்தை திறந்து தனது தாயாருக்கு இரு இளவரசர்களும் அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேபாள் நாட்டிற்கு தற்போது சுற்றுப்பயணமாக சென்றுள்ள இளவரசர் ஹரி இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

அப்போது இளவரசர் ஹரி பேசியபோது, ‘மறைந்த எங்களது தாயாருக்கு சகோதரர் வில்லியம் மற்றும் நானும் இணைந்து மிகப்பெரிய நினைவிடம் ஒன்றை கட்டி வருகிறோம்.

தாயார் மீது எவ்வளவு அன்பும் பாசமும் எங்களுக்கு இருக்கிறது என்பது இந்த நினைவிடத்தின் வேலைப்பாடுகளில் வெளிப்படும் என இளவரசர் ஹரி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Related posts: