வடகொரியாவின் ராக்கெட் சோதனை முயற்சி தோல்வி – தென் கொரியா!
Sunday, October 16th, 2016
வட கொரியா நடத்திய சமீபத்திய விண்கலம் சோதனை தோல்வியில் முடிந்துள்ளது என அமெரிக்க கடற்படை மற்றும் தென் கொரிய இராணுவம் அகியன இணைந்து வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்கலம் பறக்க தொடங்கிய உடனேயே வெடித்துச் சிதறியது என தென் கொரியர்கள் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமையன்று அந்த சோதனை முயற்சி குசாங் நகருக்கு அருகில் கண்டறியப்பட்டது என அமெரிக்க கடற்படை தளபதி கேரி ராஸ் தெரிவித்துள்ளார்.
அந்த விண்கலம், 3000 கிமீ தூரத்திற்கும் அதிகமாக சென்று தாக்கும் வல்லமைக் கொண்ட முசுடன் என்னும் பெலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. ஆனால் வட கொரியா இது குறித்து எந்த தகவலையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

Related posts:
சிரியா தொடர்பில் ஆராய சர்வதேச மாநாடு!
தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இலத்திரனியல் அனுமதி அவசியம் – முதலமைச்சர்!
யுக்ரைனின் இரு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தம் - பொதுமக்கள் வெளியேறுவதற்காகவே இந்த நடவடிக்கை எ...
|
|
|


