சிரியா தொடர்பில் ஆராய சர்வதேச மாநாடு!

Monday, September 19th, 2016

சிரியாவின் எதிர்காலம் தொடர்பில் நியூயோர்க்கில் உள்ள சவுதி அரேபியா அலுவலகத்தில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் வெளிநாட்டு அமைச்சர்கள் ஒன்று கூடி ஆராய்ந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியாவின் அழைப்பின் பேரில் இடம்பெறும் இந்த கூட்டத்தில், கட்டார், துருக்கி, பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பங்கு கொண்டுள்ளன.இதேவேளை, கடந்த ஒருவார காலமாக நீடித்த சிரியாவின் யுத்த நிறுத்தம் இன்றுடன் முடிவடைந்துள்ளதுடன், சிரியாவில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்ப்பான அமெரிக்க – ரஷ்ய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து ரஷ்யாவும், சிரியாவும் போராளிகள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளமை குறிப்பிடத் தக்கது.

Untitled-3 copy

Related posts: