பேஸ்புக் பாவனையாளர் தகவல் திருட்டு மார்க் நேரில் ஆஜராக அழைப்பாணை!

Friday, March 23rd, 2018

பேஸ்புக் பாவனையாளர்களின் தகவல்கள் திருடப்படுவது குறித்து பேஸ்புக் அதிபர் மார்க் ஜீக்கர்பெர்க் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இங்கிலாந்து எம். பிக்கள் குழு உத்தரவிட்டது. சமூக வலைத்தளமான பேஸ்புக் உலகம் முழுவதும் கோடிக் கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றார்கள். இதற்கிடையே பேஸ்புக் தொடர்பாக இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

பேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேர் பற்றிய விபரங்கள் ஆப் மூலம் திருடப்பட்டு கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி அந்த விபரங்கள் அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி விசாரணை நடத்த இங்கிலாந்து எம்.பி.டாமியன் கொலின்ஸ் தலைமையில் எம். பிக்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு பேஸ்புக் அதிபர் மார்க் ஜீக்;கர்பெர்க் 26 ஆம் திகதிக்குள் தங்கள் முன்பு நேரில் ஆஜராகி இவ் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

Related posts: