பிரெக்சிற் :குழப்பத்தில் உள்ளது பிரித்தானியா!

Wednesday, August 9th, 2017

சர்ச்சைக்குரிய பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் பிரித்தானியா சரியான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளாது குழப்பமான நிலையில் உள்ளதாக அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் அலெக்சான்டர் டவுனர் தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற் விடயம் தொடர்பில் பி.பி.சினால் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா ஆகியன பிரெக்சிற்றின் பின்னரும் சுதந்திர வர்த்தகத்தை ஏற்படுத்துவது தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டும் என குறிப்பிட்ட அவர், அவ்விடயம் தொடர்பில் பலர் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறந்த பிரெக்சிற் உடன்படிக்கையை எட்டுவதில் இருதரப்பும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை பிரெக்சிற் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்படிக்கை ஒன்றை எட்ட முடியாது போகும் பட்சத்தில், அதற்கு மாற்றீடாக பயன்படுத்தக்கூடிய உடன்படிக்கை ஒன்றை பிரித்தானியா தயாரிக்க வேண்டும் என முன்னதாக இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநர் மேர்வின் கிங் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: