வெனிசுவேலாவில் கடுமையான மின்சார தட்டுப்பாடு -அரச ஊழியர்கள் பணி நாட்கள் குறைப்பு!

Thursday, April 28th, 2016

வெனிசுவேலாவில் நிலவும் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக அரச ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வேலை எனும் கட்டுப்பாட்டை அரச விதித்துள்ளது.

மின்சார நெருக்கடி காரணமாக சுமார் இருபது லட்சம் அரசு ஊழியர்கள் இனி வாரத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பணிக்கு வந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தற்காலிகமானது என்றும், மின் பிரச்சினை தீரும் வரை இது நடைமுறையில் இருக்கும் எனவும் நாட்டின் துணை அதிபர் அரிஸ்டோபுலோ இட்ஸ்ரூயிட்ஸ், அறிவித்துள்ளார்.

அதேபோல் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வெள்ளிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்.

காலநிலை மாற்றம் மற்றும் எல்நின்யோ பிரச்சனைள் காரணமாக நீர்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும், அதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளார்

ஆனால் பிரச்சனையை அரசு சரியாக கையாளாததாலேயே இது முற்றியுள்ளது என எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts: