90 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்றார் பிரித்தானிய மகாராணி!

Thursday, April 21st, 2016

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் நாளைய தினம் தனது 90 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடவுள்ளார்.

இரண்டாம் உலகப்போரின் பாதிப்புக்களில் இருந்து பிரித்தானியா மீண்டுவரும் காலப்பகுதியில் தனது 25 ஆவது வயதில் அரியணை ஏறியிருந்தார்.

அரியணையில் நீண்டகாலம் நீடித்தவர் என்ற தனது பூட்டியான விக்டோரியா மகாராணியின் சாதனையை கடந்த செப்டெம்பர் மாதம் எலிசபெத் மகாராணி முறியடித்திருந்தார்.

அத்துடன் தற்போதுள்ள மிகவும் பழமையான அரச பரம்பரையைச் சேர்ந்த ஒருவராக அவர் வரலாற்றில் பதிவாகியுள்ளார்.

கடந்த 12 மாதங்களில் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் 70 ஆண்டு பூர்த்தி நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்றிருந்ததுடன், அரச முறைப் பயணமாக ஜேர்மனிக்கு விஜயம் செய்திருந்தார்.

அத்துடன் மோல்டாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டிலும் பிரித்தானிய மகாராணி பங்கேற்றிருந்தார்.

கடந்த ஆண்டு இறுதியில் பெங்கிங்ஹேம் அரண்மலையில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை எலிசபெத் மகாராணி சந்தித்திருந்தார்.

Related posts: