வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை தோல்வி – சொல்கிறது அமெரிக்கா!

Saturday, April 29th, 2017

வடகொரியா மேற்கொண்ட மற்றுமொரு ஏவுகணைப் பரிசோதனை தோல்வியில் முடிந்துள்ளதாக அமெரிக்கா பாதுகாப்பு தரப்பு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நாடுகளும் வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைக்கு கண்டனம் வெளியிட்டிருந்ததுடன், பல்வேறு எதிர்ப்புக்களும் தெரிவிக்கப்பட்டன.அமெரிக்கா, ரஸ்யா, சீனா போன்ற மிக முக்கிய நாடுகள் வடகொரியாவின் செயற்பாட்டிற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டன.

எனினும் தன்னுடைய பாதுகாப்பிற்கும், தன் நாட்டின் தற்காப்பிற்குமாகவே இவ்வாறான பரிசோதனைகளில் தாம் ஈடுபடுவதாக அந்நாடு தெரிவித்து வந்தது.இதுவரை, இரண்டு அணுகுண்டு பரிசோதனைகளையும், 24 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனைகளையும் வடகொரியா மேற்கொண்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடகொரியா தன்னுடைய ஏவுகணைப் பரிசோதனை செய்தது. அது தோல்வியில் முடிவடைந்ததாக அமெரிக்கா தெரிவித்தது.00எனினும் தாங்கள் இந்த முயற்சியில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும், அடுத்த சில நாட்களில் மீண்டும் ஏவுகணைப் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றும் வடகொரிய ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வடகொரியாவின் இந்தச் செயற்பாடுகளால் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் வடகொரிய தீபகற்பத்திற்கு விரைந்தன

Related posts: