எட்டும் வரை போராட்டத்தை தொடரும் – தலிபான் தலைவர்!

Sunday, June 2nd, 2019

தமது இலக்கை எட்டும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், மேற்கு நாடுகளின் ஒத்துழைப்புடன் செயல்படும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன், எந்த விதமான பேச்சுவார்த்தையையும் மேற்கொள்ள தயாராக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் இஸ்லாமியர்களின் புனித தினத்தை முன்னிட்டு, அவரினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படின், தசாப்த காலங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை நிறுத்த தாம் தயாராகவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டு துருப்பினரின் செயல்பாட்டுடன் இயங்கும் ஆப்கானிஸ்தான் அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய தலிபான் செயல்பட தயாராக இல்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆப்கானிஸ்தானில் நிலைக் கொண்டுள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளின் துருப்பினர்களை அங்கிருந்து அகற்றுவது குறித்து தலிபானின் பிரதிநிதிகள், அமெரிக்க இராஜதந்திரிகளுடன் முன்னதாக பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டனர்.

இந்த நிபந்தனைக்கு அவர்கள் இயங்கும் பட்சத்தில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்களை மேற்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர்கள் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: