பிரித்தானிய பிரதமர் தெரீசா மே இந்தியா விஜயம்!

Monday, November 7th, 2016

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறிய பிறகு இந்தியாவுடன் சாத்தியமான வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்க பிரித்தானிய பிரதமர் தெரீசா மே இந்தியா செல்லவுள்ளார்.

இந்தியப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் மீதான பிரித்தானிய குடிவரவு கட்டுப்பாடுகள், தெரீஸா மேவின் எதிர்பார்ப்புகளுக்கு முட்டுக்கட்டையாக அமையலாம் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் படிப்பை முடித்துவிட்டு அங்கு தொடர்ந்து தங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஐந்தாண்டுகளில் பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 50 சதம் குறைந்துள்ளதாக இந்திய அரசின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

தெரீசா மேவிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் ஒரு சிக்கலான நிலையைத் தரும் என்று செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரித்தானியாவுக்கள் நுழையும் அனைத்து குடியேறிகளையும் நிறுத்துவதாக தெரீசா மே உறுதியளித்துள்ளார்.ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று பிரசாரம் செய்தவர்கள் இதே கோரிக்கையை பிரதானமாக முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்தியாவின் நிலைப்பாடு தெரீஸா மேவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

_92296668_gettyimages-620561958

Related posts: