சீனா பாரபட்சமற்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது – போரை நிறுத்த உக்ரைனும், ஐரோப்பாவும் தயாராக இல்லை – ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் தெரிவிப்பு!

Friday, March 24th, 2023

உக்ரைனுடனான மோதலில் சீனா பாரபட்சமற்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. ஆனால் போரை நிறுத்த உக்ரைனும், ஐரோப்பாவும் தயாராக இல்லை என ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாட்கள் பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். இந்தச் சந்திப்பில் இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது.

இதுகுறித்து புடின் கூறும்போது, “சீனா உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத்தான் முயற்சி செய்கிறது. இவ்விவகாரத்தில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா இருக்கிறது.

சீன அமைதித் திட்டத்தின் பல விதிகள் உக்ரைனில் மோதலை தீர்ப்பதற்கான அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படலாம்.

உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் சமாதானத்துக்கு தயாராக இருக்கும் பட்சத்தில் சீனாவின் அமைதித் திட்டம் போரை முடிவுக்கு கொண்டு வரலாம்.

ஆனால் உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் இருந்து அந்த தயார் நிலையை ரஷ்யா இதுவரை பார்க்கவில்லை” – எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: