அரசியல் மற்றும் இன வேறுபாடுகளுக்கு இளைஞர்கள் இடமளிக்கக் கூடாது – பத்திரிகையாளர் சந்திப்பில் தோழர் ஸ்டாலின் வலியுறுத்து!

Wednesday, May 24th, 2017

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால வெற்றிக்காகவும், பாதுகாப்பான வாழ்க்கைக்காகவும் அனைத்து அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்துக் கட்சிகளின் இளைஞர் அமைப்புக்களும் இணைந்து செயற்படுவதுதற்கு நாம் உறுதி எடுத்துக் கொண்டிருக்கின்றோம். சவால்களையும், தடைகளையும் எதிர்கொண்டு அந்த இலக்குநோக்கிப் பயணித்துஎமது இலங்கைத் தாய் நாட்டைமுன்னோக்கிகொண்டுசெல்வொம் என்றுஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் தோழர் ஸ்டாலின் தெரிவித்தார்.

“சமாதானம், ஒருமைப்பாடுமற்றும் ஏகாதிபத்தியத்திற்குஎதிரானபோராட்டம் என்ற தொனிப்பொருளுடன் கடந்தகாலத்தை அனுபவமாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம்”என்ற இலக்கு நோக்கிஎதிர்வரும் ஒக்ரோபர் மாதம் ரஸ்யாவில் நடைபெறவிருக்கும் 19ஆவது உலக இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பின் விழாவில் இலங்கையிலிருந்து கலந்துகொள்ளும் இளைஞர் மற்றும் மாணவர்களின் ஆயத்தக் குழுவினரும், உலக இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பின் தலைவர் உள்ளிட்ட சர்வதேசக் குழுவினரும் இணைந்து ஊடகவியலாளர்களைசந்திக்கும் நிகழ்வு இன்றுகல்கிஸை பேஜ்ஜயா ஹோட்டலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டுஉரையாற்றியதோழர் ஸ்டாலின் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கையிலுள்ள 14 பிரதான அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய 33 இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் இன்று எமக்கிடையேயான அரசியல் பேதங்களைக் கடந்து பொது நோக்கத்துடன் ஒன்றுபட்டிருக்கின்றோம்.

இந்த ஒற்றுமையானது, வெளிநாடுகளில் நடக்கும் திருவிழாக்களில் கலந்துகொண்டு கலைந்துசெல்வதாக இருக்கக்கூடாது. இந்த ஒற்றுமையை எமது இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், எமதுநாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காகவும் நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

அரசியல் வேறுபாடுகளுக்கும், இன வேறுபாடுகளுக்கும் நாம் இந்தநாட்டில் இடமளிக்கக் கூடாது. நாம் ஒற்றுமையாக முயற்சிப்பதன் ஊடாகவே எமது நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியும் எனவே ரஸ்யாவில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்குப் பிறகும் நாம் இளைஞர்களுக்காகவும்,மாணவர்களுக்காகவும் பொதுவேலைத்திட்டத்தின் அடிப்படையில் இணைந்துசெயற்படவேண்டும் என்றும் கூறினார்.

இந்தபத்திரிகையாளர் சந்திப்பில்,உலக இளைஞர்கள் அமைப்பின் தலைவர் பாப்பத்திமற்றும் பிரதிநிதிகளும், இலங்கையின் மாநாட்டுஆயத்தக் குழுவின் இணைத்தலைவர்களானஅமைச்சர் துமிந்ததிஸாநாயக்க,நாடாளுமன்றஉறுப்பினர் நளிந்த ஜெயதிஸ்ஸ,அமைப்பின் செயலாளர் மாகாணசபையின் அமைச்சர் வீரசுமனவீரசிங்கமற்றும் அரசியல் கட்சிகளின் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பக்களின் தலைவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts: