சட்டவிரோதமாக அமெரிக்கா நுழைந்த ஆயிரத்து 133 பேர் கைது!

Wednesday, March 30th, 2016
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட சுமார் 1000 பேரை அந்நாட்டு குடியுரிமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களைக் கைது செய்ய அந்நாட்டு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.   இதன் ஒரு பகுதியாக குடியுரிமைத்துறை அதிகாரிகளுடன் இணைந்து 5 வார கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதில், சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்துள்ள ஆயிரத்து 133 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   அவர்களில் 915 பேர் குற்றப்பின்னணி உடையவர்கள் என்றும், மீதமுள்ளோர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த குற்றத்தில்  ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

Related posts: