ரஷ்யா செல்கிறார் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்!

ரஷ்ய அதிபர் அழைப்பின் பேரில் விரைவில் ரஷ்யா செல்கிறார் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்க அதிபர் டெனால்டுடிரம்ப் ஆகியோர் கடந்த 12 ஆம் திகதி சிங்கப்பூரில் சந்தித்து பேசினர்.
இதையடுத்து அணு ஆயுதத்தை ஒழித்திட இரு தரப்பிலும் உறுதி ஏற்கப்பட்டது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின் அழைப்பின் பேரில் வடகொரியா அதிபர் கிம் ஜாங்க் உன் வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவலகள் வெளியாகி உள்ளன.
இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்க உள்ளதாக வட கொரிய செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
Related posts:
6 வாரம் சசிகலா புஷ்பா எம்.பி.யை கைது செய்வதற்கு தடை!
பயங்கர தீ விபத்து - 16 பேர் பலி, 450 பேர் காயம்!
கடன் மறுசீரமைப்புக்கு சீனா இணக்கம் - சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அறிவிப்பு!
|
|