கடன் மறுசீரமைப்புக்கு சீனா இணக்கம் – சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அறிவிப்பு!

Saturday, December 17th, 2022

கடன் மறுசீரமைப்புக்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கை போன்ற நாடுகளுக்கான கடன் நிவாரண வேலைத்திட்டத்தை விரைவாக முன்னெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான வாய்ப்புகள் குறித்து கடந்த வாரம் சீனாவுடன் அவர் பேச்சு நடத்தியிருந்தார்.

ஆகவே குறித்த நாடுகள் எதிர்கொள்ளும் கடன் பிரச்சினைகளை கையாளமுடியும் என்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

இருப்பினும் ஜி20 கட்டமைப்பின் கீழ் நிவாரணம் வழங்குவதில், சீனாவின் வகிபாகம் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: