அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: ரஷ்யாவின் தலையீடு தொடர்பில் ரெக்ஸ் டில்லர்சன் கருத்து!

Wednesday, August 9th, 2017

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு விவகாரத்தால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற ஆசியான் உச்சிமாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த விவகாரம் தொடர்பில் அதிருப்தியடைந்த ரஷ்யா, அங்குள்ள நூற்றுக்கணக்கான அமெரிக்க இராஜதந்திரிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது.அதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் குறித்த நடவடிக்கைக்கு அமெரிக்கா தகுந்த பதிலடி கொடுக்கும் என அமெரிக்கா அறிவித்தது.

இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த ரெக்ஸ் டில்லர்சன், “அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. அத்துடன், இரு நாட்டினதும் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. குறித்த உறவை சீர்செய்வது தற்போதைய காலகட்டத்தில் மிக அவசியமான விடயமாகியுள்ளது” என தெரிவித்துள்ளார்

Related posts: