சசிகலா விவகாரத்தில் திடீர் திருப்பம்…! ஆளுநர் மாளிகை மறுப்பு!

Saturday, February 11th, 2017

தமிழக முதலமைச்சராக பதவியேற்க சசிகலாவுக்கு உடனடியாக அழைப்பு விடுக்க முடியாது என ஊடகங்களில் வெளியான செய்திக்கு தமிழக ஆளுநர் மாளிகை மறுப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க கட்சியில் உட்பூசல் ஏற்பட்டுள்ளதையடுத்து, ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர் தலைமையில் இரண்டு தரப்பாக பிளவடைந்துள்ளது.

இந்நிலையில், காபந்து அரசாங்கத்தின் முதலமைச்சரான ஓபிஎஸ் மற்றும் அ.தி.மு.க கட்சியின் பொது செயலாளர் சசிகலா ஆகியோரை தமிழக பொறுப்பு ஆளுநர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்நிலையில், தமிழக நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் வித்தியசாகர் ராவ் 3 பக்க அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு நிலுவையில் இருப்பதாலும், அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதாக முறைப்பாடு வந்திருப்பதாலும், தற்போதைய சூழலில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என தெரிவித்து குறித்த அறிக்கை அனுப்பப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை எனவும் ஆளுநர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், தற்போது ஆளுநர் மாளிகை அந்த செய்திகளுக்கு மறுப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

201702071053052712_sudden-twist-Court-verdict-after-Shashikala-inaugural_SECVPF

Related posts: