யேமனில் வான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சவுதி அரசாங்கம் உறுதி!

Thursday, October 13th, 2016

யேமனில் இறுதிச் சடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் காயமடைந்துள்ள ஏமன் நாட்டவருக்கு வெளிநாடுகளில் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் அவர்கள் வெளியேற வழிவகை செய்யப்படும் என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

ஹவுதி கட்டுப்பாட்டு பகுதியான தலைநகர் சனாவில் சவுதி அரேபியாவால் விதிக்கப்பட்ட வான் கட்டுப்பாடு, காயமடைந்தவர்கள் வெளியேற வசதியாக தளர்த்தப்படும்.. சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட சவுதி தாக்குதலில் 140க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

சவுதி அரேபியா தனது விமானங்கள்தான் தாக்குதல்களை நடத்தின என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் தாக்குதல் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளது. இறுதிச் சடங்கு நடந்த மண்டபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சர்வதேச அளவில் வலிமையான கண்டனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது

_91890297_gettyimages-613354844

Related posts: