சீனா – இந்தோனேஷியா பாதுகாப்பு ஒத்திகை!
Sunday, March 27th, 2016
இந்தோனேஷியா நடத்தும் கூட்டு பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்பதற்காக சீனக் கப்பல்கள் புறப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
தென் சீனக் கடலில் சர்சைக்குரிய ஒரு பகுதி குறித்து ஒரு வாரத்திற்கு முன்பாக சர்ச்சை வெடித்த நிலையில் இந்த கூட்டு ஒத்திகை நடைபெறுகிறது. கடந்த வாரம், சர்சைக்குரிய பகுதியில் சீனப் படகு ஒன்று மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இந்தோனேஷிய ரோந்துக் கப்பல் ஒன்று அதனைத் தடுக்க முயன்றது. அதனை சீன கடலோரக் காவல் படையின் கப்பல் எதிர்த்தது.
இந்த சம்பவத்தின்போது கைதுசெய்யப்பட்ட 8 மீனவர்களை விடுவிக்க இந்தோனேஷியா மறுத்துவருகிறது. ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட 16 நாடுகள் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்கின்றன.
Related posts:
சுற்றுலா விமானம் விபத்து : 4 பேர் உயிரிழப்பு!
கொவிட்-19 - பிரான்ஸில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
"பிபா 2026 உலகக் கிண்ணம்" - இஸ்ரேல் பங்கேற்றால் தொடரை புறக்கணிக்க திட்டமிடும் - ஸ்பெயின்
|
|
|


