கொவிட்-19 – பிரான்ஸில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Friday, April 16th, 2021

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் வைரஸ் தொற்றினால் ஒரு இலட்சத்து 73பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரான்ஸில் இதுவரை 51இலட்சத்து 87ஆயிரத்து 879பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 38ஆயிரத்து 45பேர் பாதிக்கப்பட்டதோடு 296பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 10இலட்சத்து 79ஆயிரத்து 475பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஐந்தாயிரத்து 924பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 40இலட்சத்து எட்டாயிரத்து 331பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

Related posts: