ஐ.எஸ் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவர் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு!

Saturday, September 17th, 2016

இஸ்லாமிய ஆயுததாரிகளின் மூத்த தலைவர்களில் ஒருவர் அமெரிக்கா நடத்திய விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என பெண்டகன் அறிவித்துள்ளது.

கடந்த செப்டெம்பர் 7 ஆம் திகதி ராக்கா நகரில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலிலேயே இவர் கொல்லப்பட்டுள்ளார் என பெண்டகன் உறுதிப்படுத்தியுள்ளது.

ஐ.எஸ் அமைப்பில் பிரசார பணிகளுக்கும் தகவல் தொடர்பாடல் துறைக்கும் பொறுப்பாளராக செயற்பட்ட வாலி அடில் ஹசன் சல்மான் அல் ஃபயாட் என்பவரே குறித்த தாக்குதலில் உயிரிழந்தள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐ.எஸ் அமைப்பினரால் வெளியிடப்படும் காணொளிகள் மற்றும் ஒலிப்பதிவுகளை தயாரிப்பதற்கும், மேற்பார்வை செய்வதும் குறித்த நபர் பிரதான சூத்திரதாரியாக இருந்தார் என பெண்டகன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் அமெரிக்க துருப்புக்கள் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவரான அபு மொஹமட் அல் – அத்தானியின் நண்பன் இந்த ஃபயாட் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது.

‘கொல்லப்பட்ட அல் ஃபயாட், ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினராக உள்ளதுடன்  ஷுரா சபையிலும் உறுப்பினராக இருந்துள்ளான் என பென்டகன் செய்தித் தொடர்பாளர் பீட்டர் குக் தெரிவித்துள்ளார்.

download (1)

Related posts: