எம்.எச் 17 விமானம் ரஷ்யா வழங்கிய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது!

Wednesday, September 28th, 2016

எம்எச் 17 விமானம் ரஷியா வழங்கிய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்மாடாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.17 ரக பயணிகள் விமானம் ஒன்று கடந்த 2014 ஜூலை மாதம் 17ஆம் தேதி சென்றது. ரஷியா எல்லைப் பகுதி அருகே உக்ரைனில் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 15 விமான ஊழியர்கள் உட்பட பயணம் செய்த  298 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள்.

MH17  விமான விபத்து  குறித்து  சர்வதேச விசாரணை நடைபெற்று வருகிறது. விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து கிடைத்த சில துண்டுகள் ரஷ்யாவின் தரையில் இருந்து வானத்தில் தாக்கும் பக் (BUK) ஏவுகணை பாகங்களுடன் ஒத்துபோவதாக ஏற்கனவே தெரியவந்தது.

விமானத்தை ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகள் தான் சுட்டு வீழ்த்தினர் என குற்றம் சாட்டபட்டது அதற்கு ஆதாரபூர்வமான சான்றும் (ஏவுகணை பாகம்) கிடைத்தது. ஆனால் அதற்கு பதிலாக ரஷியா மேற்கத்திய நாடுகளை குற்றம் சுமத்தியது.இந்நிலையில் எம்எச் 17 விமானம் ரஷியா வழங்கிய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று விசாரணை அதிகாரிகள் கூறிஉள்ளனர்.

டச்சு போலீஸ் விசாரணை வில்பர்ட் பவுலிசென் பேசுகையில், ”கிரிமினல் விசாரணையின் அடிப்படையில், எம்.எச்.17 விமானமானது ரஷியாவின் பக் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்ற முடிவுக்கு வந்து உள்ளோம், பக் ஏவுகணை 9M83 ரகத்தை சார்ந்தது, ஏவுகணையானது ரஷிய பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டு உள்ளது,” என்று கூறிஉள்ளார்.  ஏவுகணை லாஞ்சர் பின்னர் ரஷியாவிற்கே கொண்டு செல்லப்பட்டு விட்டது என்று விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Untitled-1 copy

Related posts: