நான்கு ஆண்டுகளில் ஸ்பெயினில் 4வது பொதுத் தேர்தல்!

Tuesday, November 12th, 2019

ஸ்பெயினில் கடந்த நான்கு ஆண்டுகளில் நான்காவது பொதுத் தேர்தலில் நேற்று(10) மக்கள் வாக்களித்தனர்.

கடைசியாக கடந்த ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் சோசலிச தொழிலாளர் கட்சி அதிக இடங்களை பெற்றபோதும் அறுதிப் பெரும்பான்மையை பெறத் தவறியதோடு கூட்டணி அரசு ஒன்றை அமைப்பதிலும் தோல்வி அடைந்தது.

கடந்த 2015 தொடக்கம் ஸ்பெயினில் ஸ்திர அரசாங்கம் ஒன்றை அமைப்பதில் போராட்டத்தைச் சந்தித்து வருகிறது.

கட்டலான் பிரச்சினையை இந்தத் தேர்தலில் அதிக செல்வாக்குச் செலுத்துவதோடு, வலதுசாரிக் கட்சிகள் பிரிவினைவாதிகளுக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: